AI பயன்படுத்துவதால் மாணவர்களின் சிந்தனை ஆற்றல் மங்கிவிடுகிறதா?

Reposted from Source: Mediacorp Seithi

Read the English version: Click Here

Published/வெளியீடு: 26 February 2026 09.43AM (Updated,வெளியீடு: 26 February 2026 11.23AM)

படம்: Envato Elements (Source: Mediacorp Seithi)

மாணவர்களின் கற்றலில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கத்தைக் கல்வி அமைச்சு ஆராய்கிறது.

கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அதனைத் தெரிவித்தார்.

சரியான கட்டமைப்பு இல்லாமல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மாணவர்கள் அந்தத் தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்க நேரலாம் என்று திரு லீ சொன்னார்.

ஓர் அம்சத்தை நினைவுகூர்வது, எளிமையானவற்றைப் புரிந்துகொள்வது ஆகிய தன்மைகள் பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.

சிக்கலான அம்சங்களைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் கட்டுப்படுத்தப்படும் என்றார் திரு லீ.

அதனால்தான் மாணவர்கள் வலுவான அடித்தளத்தை வளர்க்கும் வரையில் ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவைப் பாடங்களில் அறிமுகப்படுத்துவதில்லை என்று அவர் சொன்னார்.

மாணவர்களின் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, அதனால் அறிவாற்றலில் ஏற்படும் விளைவு ஆகியவற்றைப் பற்றி பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சோவ் (Cai Yinzhou) கேட்டிருந்தார்.

அதற்கு அமைச்சர் லீ எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

Source,ஆதாரம் : Mediacorp Seithi

Previous
Previous

拉哈尤:未来不排除禁售调味烟草 或进一步调高烟草税

Next
Next

卫生部正在检讨禁止销售口味香烟